×

'நான் கன்னடர் என்று பேசிவிட்டு இங்கு ஏன் வந்தீர்கள்?': பாஜகவின் அண்ணாமலையை பார்த்து இளைஞர் சரமாரி கேள்வி..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜகவின் அண்ணாமலையை பார்த்து இளைஞர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நாளை பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்ற அவர் அக்கட்சியினர் இடையே உரையாற்றினார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலையை பார்த்து நான் தமிழனே இல்லை கன்னடர் என நீங்கள் பேசும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறதே என்று கேட்டிருக்கிறார். அவ்வாறு பேசிவிட்டு இப்போது இங்கு ஏன் வந்தீர்கள் என கேள்வி கணைகளை தொடுத்திருக்கிறார்.

முன்னதாக அண்ணாமலை அணிவிக்க வந்த காவி துண்டையும் அந்த இளைஞர் ஏற்க மறுத்துவிட்டார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பாஜகவினர் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்து சென்றனர். தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த பின் பாராட்டு விழா ஒன்றில் பேசிய அவர், நான் பிறந்த இடம் வேறாக இருக்கலாம். ஆனால் கன்னடர் என்பதில் பெருமை கொள்கிறேன். கடைசி மூச்சு இருக்கும் வரை நான் கன்னடர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kannada ,Pajaga , Gunner, BJP, Annamalai, Youth, Question
× RELATED கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்